வயல் வேலைக்கு சென்ற மூதாட்டி ரெயில் மோதி பலி

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், வயலில் வேலைக்கு செல்வதற்காக கடம்பூர் மணியாச்சி இடையே ரெயில்வே தண்டவளத்தை கடந்து செல்ல முயன்றார்.
வயல் வேலைக்கு சென்ற மூதாட்டி ரெயில் மோதி பலி
Published on

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கள்ளத்திகிணறு கிராமம் ஆர்சி கோவில் தெருவில் வசிப்பவர் அமல்ராஜ். இவரது மனைவி புஷ்பம் (வயது 73). இவர் வயலில் வேலைக்கு செல்வதற்காக கடம்பூர் மணியாச்சி இடையே ரெயில்வே தண்டவளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் சென்ற அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com