

விருதுநகர்,
விருதுநகர் அல்லம்பட்டி எஸ்.வி.பி.என்.எஸ். காலனியைச் சேர்ந்த நாகேந்திரனின் மனைவி ஜோதிராணி (வயது 65). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை அவரது மகன் வீட்டிற்குச் சென்ற போது, ஜோதிராணி ரத்தவெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
மேலும், அவர் கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் தங்கச்செயின் மற்றும் காதில் அணிந்திருந்த கம்மல் ஆகியவை மாயமாகி இருந்தன. இதுகுறித்து தகவலறிந்த விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தடயங்களையும் சேகரித்தனர்.
மூதாட்டியின் வாயில் இருந்து ரத்தம் வழிந்திருப்பதால் நகைக்காக இந்தக் கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.