ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்குகள் ரத்து

தேர்தல் விதிமுறைகளை முறைகளை மீறியதாக ஓ.பன்னீர் செல்வம் மீது 4 காவல் நிலையங்கள் வழக்கு பதிவானது.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்குகள் ரத்து
Published on

சென்னை,

பரமக்குடி, திருவாடானை, திருப்புல்லாணி, கீழக்கரை காவல் நிலையங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறியது தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.

தேர்தல் விதிமுறைகளை முறைகளை மீறியது தொடர்பாக 2024-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரி ஓ.பன்னீர் செல்வம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com