

சென்னை,
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு, சாய்குமாரை தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. அதேபோல் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, அந்த இடத்தில் சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கைக்கு ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.
அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியதாவது: தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை தேர்தல் ஆணையம் பணிமாற்றம் செய்திருப்பது அதிகார வரம்பை மீறிய செயல். தேர்தல் ஆணையத்தின் செயல் கடும் கண்டனத்திற்குரிய செயல்தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்திற்கு வரம்பிருக்கிறது
தன்னிச்சையான (arbitrary) நியாயமற்ற (unfair) செயல் அதிகார வரம்பை மீறிய செயல்தேர்தல் ஆணையத்திற்கு மேல் மக்கள் இருக்கிறார்கள், அந்த மக்கள் கைகளில் வாக்கு என்ற சக்தி இருக்கிறது என்பதைத் தேர்தல் ஆணையத்திற்கு நினைவு படுத்த வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ளது” என்று கூறியுள்ளார்.