

தூத்துக்குடி,
தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் அரசியல் கட்சியினர் தங்கியுள்ள தனியார் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஒட்டபிடாரத்தில் இன்று பிரசாரத்தில் ஈடுபட உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் இந்த விடுதியில் தான் தங்க உள்ளார். ஸ்டாலின் பயன்படுத்த உள்ள வாகனத்திலும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.