தமிழகத்தில் 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றம் - தேர்தல் ஆணையம் உத்தரவு

மாற்றப்பட்ட எஸ்.பி.க்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
Published on

சென்னை,

தமிழகத்தில் 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை(எஸ்.பி.) மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி காஞ்சீபுரம், தஞ்சை, தென்காசி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் காஞ்சீபுரம் எஸ்.பி.யாக ஜி.ஜவகர், தஞ்சை எஸ்.பி.யாக இ.சுந்தரவதனம், தென்காசி எஸ்.பி.யாக ஜி.எஸ்.ஏ.மயில்வாகனன் மற்றும் பெரம்பலூர் எஸ்.பி.யாக கே.பிரபாகர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட எஸ்.பி.க்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com