தேர்தல் ஆணையத்தின் இணைய பக்கம் முடங்கியது - வாக்காளர்கள் சிரமம்


தேர்தல் ஆணையத்தின் இணைய பக்கம் முடங்கியது - வாக்காளர்கள் சிரமம்
x

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 3 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த சிறப்பு திருத்தப் பணிகளின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்பதால் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். தமிழகத்தில் மொத்தம் 98 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் உள்ளதா? என வாக்காளர்கள் அதிகம் பேர் ஒரெ நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தை ஆக்கிரமித்தனர். இதனால் தேர்தல் ஆணையத்தின் இணைய பக்கம் முடங்கியது. வாக்காளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் விவரங்களை அறிந்து கொள்ள அணுகியதால் முடங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இணைய பக்கம் முடங்கியதால், தங்களது பெயர் உள்ளதா? என தெரிந்துகொள்வதில் வாக்காளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. வாக்காளர்கள் பொறுத்திருந்து தங்களது விபரங்களை தெரிந்துகொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story