தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: அவதூறு நாடகத்திற்கு உச்சநீதிமன்றத்தின் சம்மட்டி அடி! - நயினார் நாகேந்திரன்

போலி பிரசாரக் கும்பலின் முகமூடி மீண்டும் கிழிந்திருக்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன்
Published on: 

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அவதூறு நாடகத்திற்கு உச்சநீதிமன்றத்தின் சம்மட்டி அடி!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், எந்தவொரு இடைக்காலத் தடையும் விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது நீதியின் வெற்றி; ஜனநாயக விரோத சக்திகளுக்கு விழுந்த சம்மட்டி அடி.

தேர்தல் களம் காணத் துணிவில்லாத காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளும், பிரிவினைவாத ‘லாபி’ கும்பல்களும், தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகள் மீது திட்டமிட்டு சேற்றை வாரி இறைத்து வருகின்றன. "ஆதாரமற்ற தகவல்களை வைத்து முடிவெடுக்க முடியாது" என உச்சநீதிமன்றம் கூறியதன் மூலம், போலி பிரசாரக் கும்பலின் முகமூடி மீண்டும் கிழிந்திருக்கிறது.

மக்கள் மன்றத்தில் எடுபடாத எதிர்க்கட்சிகள், நீதிமன்றங்களை அரசியல் களமாக மாற்ற முயல்வதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்க நினைக்கும் எந்தவொரு சதியும் மக்கள் முன்னிலையிலும், சட்டத்தின் முன்னிலையிலும் ஒருபோதும் எடுபடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com