தேர்தல் தேதி அறிவிப்பு: வெளி மாவட்டங்களில் இருந்து 36 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சென்னைக்கு மாற்றம்

இன்ஸ்பெக்டர்களுக்கு பணி நியமனம் வழங்கி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிப்பு: வெளி மாவட்டங்களில் இருந்து 36 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சென்னைக்கு மாற்றம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் தேதி தொர்பான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், வெளி மாவட்டங்களில் பணியாற்றிய 36 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சென்னைக்கு மாற்றப்பட்டனர். 36 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும் பணி நியமனம் வழங்கி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாற்றப்பட்ட ஆண் இன்ஸ்பெக்டர்கள் பெரும்பாலான பேர் போலீஸ் நிலையங்களில் குற்றப்பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பெண் இன்ஸ்பெக்டர்களுக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்தும் இன்ஸ்பெக்டர்கள் சென்னைக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆவடி கமிஷனரகத்தில் இருந்தும் இன்ஸ்பெக்டர்கள் சிலர் சென்னைக்கு பணி மாறுதலாகியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com