தேர்தல் தோல்வி - கள ஆய்வு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தோல்வி குறித்து ஆய்வு செய்ய 36 பேர் குழுவை நியமித்துள்ள திமுக. நாளை மறுநாள் முதல் தொகுதி வாரியாக கள ஆய்வு குழு ஆய்வு செய்கிறது.
தேர்தல் தோல்வி - கள ஆய்வு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Published on

சென்னை,

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், யாரும் எதிர்பார்த்திராத வகையில், வெறும் 59 இடங்களில் மட்டுமே கைப்பற்றியது.

அதிர்ச்சியளிக்கும் விதமாக திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின், அவர் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் தோல்வியடைந்தார்.

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

திமுகவின் தோல்விக்கான காரணங்கள், தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட 36 பேர் கொண்ட குழுவுடன் ஆலோசனை செய்து வருகிறார்.

முன்னதாக, தோல்வி தொடர்பாக திமுகவினரிடம் கருத்துக்கேட்பதற்காக 'உடன்பிறப்பின் குரல்' என்ற புதிய வலைதளப் பக்கத்தை ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com