அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது சிவகங்கை பட்டமங்கலத்தில் தி.மு.க.வினருக்கும் அ.தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக, திருப்பத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளரான பெரியகருப்பன் உள்ளிட்ட 8 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகங்கை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் பெரியகருப்பன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் அமைச்சர் பெரியகருப்பன் இல்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com