மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை

மதுராந்தகம் பகுதிக்குள் நுழையும் கார். வேன் உள்ளிட்ட வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
அதிகாரிகள் தீவிர வாகன சோதனை
தேர்தல் பறக்கும் படை
Published on

மதுராந்தகம்,

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அப்போது கார்களில் பொருத்தப்பட்டு இருந்த கட்சி கொடிகளை அகற்றினர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரண மாக மதுராந்தகம் தொகுதியில் சுவரொட்டிகள், பேனர்கள், சுவர் விளம்ப ரங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், கட்சி கொடி கள் மற்றும் கொடிகம்பங்களும் அகற்றப்பட்டுள்ளன.

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாகனங்களில் சோதனை

மதுராந்தகம் பகுதிக்குள் நுழையும் கார். வேன் உள்ளிட்ட வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். வாகனங்களில் பணம், பரிசுப்பொருட்கள் மற்றும் தேர்தல் விதிமுறை களை மீறும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்தப்படுகிறது.

சோதனையின்போது கார்களில் பொருத்தப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் கொடிகள் அகற்றப்பட்டன. பின்னர் அந்த வாகனங்கள் மது ராந்தகம் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டன. தேர்தல் விதிமுறைகள் முறை யாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மது ராந்தகம் தொகுதி முழுவதும் தொடர்ந்து வாகன சோதனை மற்றும் கண் காணிப்பு பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com