

மதுரை,
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.
ரூ.50ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்வோரிடம் பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் டி.குன்னத்தூர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசுப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும், தனது வீட்டில் அனுமதியின்றி கூட்டம் நடத்தி பணம் பட்டுவாடா செய்ததாகவும் புகார் எழுந்த நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் அவரது வீட்டில் சோதனை செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.