தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

காரைக்குடி செல்லும் வழிநெடுகிலும் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
Published on

காரைக்குடி,

தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தேவர் சிலை முன்பு மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை பிரசாரம் செய்ய உள்ளார்.

இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து விஜய் மேலூர், திருப்பத்தூர் வழியாக காரைக்குடிக்கு தனது பிரசார வாகனத்தில் புறப்பட்டார். அவரின் பிரசார வாகனத்தை அவரது தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் பின் தொடர்ந்து பைக்கில் சென்றனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில், காரைக்குடி செல்லும் வழியில் திருப்பத்தூர் அருகே எஸ்.எஸ்.கோட்டை பகுதியில் தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். பறக்கும் படையினரின் சோதனைக்கு விஜய் முழு ஒத்துழைப்பு வழங்கினார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் இல்லாததால் அவரது காரை அங்கிருந்து செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர். பின்னர் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com