காஞ்சி சங்கரமடத்தின் 71-வது மடாதிபதி தேர்வு


காஞ்சி சங்கரமடத்தின் 71-வது மடாதிபதி தேர்வு
x
தினத்தந்தி 26 April 2025 5:45 AM IST (Updated: 26 April 2025 5:46 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சி சங்கர மடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்து வருகிறார்.

காஞ்சீபுரம், -

காஞ்சீபுரத்தை தலைமை இடமாக கொண்டு சங்கர மடம் இந்து மதத்தை பரப்பி கல்வி பணிகளில் ஈடுபட்டு வருகிறது. காஞ்சி சங்கர மடத்தின் 68-வது மடாதிபதியாக சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளும், 69-வது மடாதிபதியாக ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளும் இருந்து மரணம் அடைந்தனர். 70-வது மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்து வருகிறார். காஞ்சி சங்கர மட பக்தர்களின் வேண்டுதலின்படி 71- வது மடாதிபதியை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தேர்வு செய்துள்ளார்.

ஆந்திர மாநிலம் அண்ணாவரம் பகுதியை சேர்ந்த துத்து சத்திய வேங்கட சூரிய சுப்ரமணிய கணேச ஷர்மா திராவிட் எனும் இயற்பெயரை கொண்ட கணேச சர்மா திராவிட் காஞ்சி சங்கர மடத்தின் 71-வது பீடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தெலுங்கானா மாநிலம் பாசரா பகுதியில் உள்ள ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் சேவையாற்றியுள்ளார். வருகிற 30-ந்தேதி அட்சய திருதியை அன்று காலை 6 மணிக்கு காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள பஞ்சகங்கா குளத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,கணேச ஷர்மா திராவிட்டுக்கு சன்யாச தீஷை வழங்கி இளைய மடாதிபதியாக நியமித்து ஆசி வழங்குகிறார். கணேச சர்மா திராவிட்டின் பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வலங்கைமான் பகுதி ஆகும்.

1 More update

Next Story