தேர்தல் முடிவுகள் பெருமகிழ்ச்சி அளிக்கிறது - விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி

விஜய் பெற்றுள்ள வெற்றியை ஒரு தந்தையாக பெருமை கொள்கிறேன் என எஸ்.ஏ. சந்திரசேகர் கூறினார்.
தேர்தல் முடிவுகள் பெருமகிழ்ச்சி அளிக்கிறது - விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி
Published on

சென்னை,

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்.23-ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தவெக 104 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார்.

இந்தநிலையில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,

தேர்தல் முடிவுகள் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. கூட்டணி இல்லாவிட்டாலும் தேர்தலை சந்திக்கும் தைரியம் விஜயிடம் இருந்தது. தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற விஜய்யின் தன்னம்பிக்கை வியப்பு அளிக்கிறது.

தவெக 100 சதவீதம் வெற்றி பெறும் என 100 சதவீதம் விஜய் நம்பினார். விஜய் பெற்றுள்ள வெற்றியை ஒரு தந்தையாக பெருமை கொள்கிறேன். விஜய் பெற்றுள்ள வெற்றி வரலாற்று சிறப்பு மிக்கது.

விஜய்யை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளீர்கள்., உங்கள் கனவை விஜய் நிறைவேற்றுவார். அவரை தலைவராக மக்கள் பார்க்கவில்லை., தங்களில் ஒருவராக பார்த்தனர் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com