தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை: திருவள்ளூரில் 7 நாட்கள் பட்டாசு கடைகள் மூட உத்தரவு

திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான மு.பிரதாப் தெரிவித்து உள்ளார்.
தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை: திருவள்ளூரில் 7 நாட்கள் பட்டாசு கடைகள் மூட உத்தரவு
Published on

திருவள்ளூர்,

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், வெடிபொருட்கள் விற்பனை மற்றும் சேமிப்பு தொடர்பான கடைகள் மற்றும் கிடங்குகள் தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வாக்குப்பதிவு நடைபெறும் காலமான வரும் 21ம் முதல் 24ம் தேதி வரை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 4ம் தேதி முன்னிட்டு 2 முதல் 4ம் தேதி வரையிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வெடிபொருட்கள் விற்பனை மற்றும் சேமிப்பு தொடர்பான கடைகள் மற்றும் கிடங்குகள் தற்காலிகமாக மூடவேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி உத்தரவினை மீறுபவர்கள் மீது காவல்துறையின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான மு.பிரதாப் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com