தேர்தல் பாதுகாப்பு பணி: திருநெல்வேலிக்கு ராஜஸ்தானில் இருந்து துணை ராணுவப் படையினர் 80 பேர் வருகை

திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சரவணன் ராஜஸ்தானில் இருந்து வந்த துணை ராணுவ படையினர் தங்கி உள்ள இடத்திற்கு நேரடியாக சென்று அங்கு அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
தேர்தல் பாதுகாப்பு பணி: திருநெல்வேலிக்கு ராஜஸ்தானில் இருந்து துணை ராணுவப் படையினர் 80 பேர் வருகை
Published on

திருநெல்வேலி மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, மத்திய துணை ராணுவப் படையைச் (எல்லை பாதுகாப்பு படை) சேர்ந்த ஒரு துணை தளவாய் உள்பட 80 பேர் அறிக்கை செய்துள்ளனர்.

இந்த நிலையில் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சரவணன், துணை ராணுவ படையினர் தங்கி உள்ள இடத்திற்கு நேரடியாக சென்று அங்கு அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என்று அவர்களிடம் குறைகள் கேட்டறிந்து, அதனை சரி செய்ய அறிவுரை வழங்கினார்.

மேற்சொன்ன துணை ராணுவ படையினர், நாங்குநேரி உட்கோட்டத்தில் தொடர்ந்து தேர்தல் சம்பந்தமான அலுவல்களில் ஈடுபடுவர். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வருகை தந்துள்ள மேற்சொன்ன துணை ராணுவப்படையில் ஒரு துணை தளவாய் உட்பட 80 நபர்கள் அறிக்கை செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com