27 மாவட்டங்களில் சுமுகமாகவும், அமைதியாகவும் தேர்தல் நடைபெற்று வருகிறது - மாநில தேர்தல் ஆணையர்

27 மாவட்டங்களில் சுமுகமாகவும், அமைதியாகவும் தேர்தல் நடைபெற்று வருவதாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
27 மாவட்டங்களில் சுமுகமாகவும், அமைதியாகவும் தேர்தல் நடைபெற்று வருகிறது - மாநில தேர்தல் ஆணையர்
Published on

சென்னை,

சென்னை அரும்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை தெரிவித்தார்.

மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறும்போது, முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.4 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

நடத்தை விதிமீறல் தொடர்பாக 112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 53 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

27 மாவட்டங்களில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் சுமுகமாகவும், அமைதியாகவும் நடைபெற்று வருகிறது. சிற்சில இடங்களில் சிறுசிறு பிரச்சினைகள் எழுந்து உடனடியாக சரிசெய்யப்பட்டதாகவும், வாக்குப்பதிவு எங்கும் நிறுத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.

முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், காலை 11 மணி நிலவரப்படி 24.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

உள்ளாட்சி தேர்தலில் முதலமைச்சர் பழனிசாமி, மனைவி ராதா, மகன் மிதுன் குமார், மருமகள் சங்கீதா ஆகியோருடன் சேலம் நெடுங்குளம் ஊராட்சிக்குட்பட்ட சிலுவம்பாளையம் தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com