சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
Published on

சென்னை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளான இன்று மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த ஏழு குழந்தைகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் தங்க மோதிரம் அணிவித்து பரிசுப்பொருட்கள் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நிர்பயா நிதியை கொண்டு தான் அரசு பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நிர்பயா நிதியை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தி வருகிறது.

திமுக ஆட்சியில் வாங்கப்பட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனிற்கு அதிமுக அரசு வட்டிக்கட்டி வருகிறது. சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை என கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com