ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தலை நடத்த வேண்டும்: தேர்தல் ஆணையரிடம் அதிமுக சார்பில் கோரிக்கை

ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையரிடம் அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தலை நடத்த வேண்டும்: தேர்தல் ஆணையரிடம் அதிமுக சார்பில் கோரிக்கை
Published on

சென்னை,

தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று காலை சென்னை வந்தடைந்தது. இந்த குழு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இன்றும் நாளையும் ஆலோசனை நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை தேர்தல் ஆணைக்குழு தனித்தனியே சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் வாக்குப்பதிவு இருக்குமிடத்தில் மின்விளக்கு பொருத்த வேண்டும் என்றும் அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தபால் வாக்களிக்கும் முறையை வரவேற்பதாகவும் அதிமுக தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையரிடம் பாஜக, காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com