சென்னையில் 30-ம்தேதி முதல் மின்சார பேருந்து சேவை

120 மின்சார பேருந்துகளின் சேவையை வருகிற 30-ம்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 5 பணிமனைகளில் இருந்து 625 மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 5 பணிமனைகள் முற்றிலுமாக மின்சார பேருந்து இயக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை வியாசாபாடி பணிமனையிலிருந்து 120 மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான பராமரிப்புக் கூடம், அலுவலக நிவாக கட்டடம், பணியாளா ஓய்வறை ஆகியவை புதுப்பிக்கப்படுவதுடன், புதிய மின்மாற்றிகள் பொருத்துதல் மற்றும் தீயணைக்கும் பாதுகாப்பு உபகரணங்களை நிறுவுதல் போன்ற கட்டுமானப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் 120 மின்சார பேருந்துகளின் சேவையை வருகிற 30-ம்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள், சென்னை முழுவதும் மொத்தமாக 625 மின்சார பேருந்துகள் இயங்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து முக்கிய நகரங்களுக்கும் மின்சார பேருந்து சேவை விரிவுபடுத்தப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com