ஆபத்தான நிலையில் மின் கம்பம்

திருச்சிற்றம்பலம் கடைவீதியில் மின்கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆபத்தான நிலையில் மின் கம்பம்
Published on

திருச்சிற்றம்பலம்:

திருச்சிற்றம்பலம் கடைவீதியில் மின்கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சேதம் அடைந்த மின்கம்பம்

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் முக்கிய பகுதியில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் முழுவதும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.

இந்த கம்பத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தை மாற்றி புதிதாக மின்கம்பம் நட்டு தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

உடனடி நடவடிக்கை

எந்த நேரத்திலும் முறிந்து விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. இதனால் மின் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சத்துடன் கூறுகிறார்கள். விபத்து நேரும் முன்பாக சேதம் அடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை உடனடியாக மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்களுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com