கவுந்தப்பாடி அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கிய மகனை காப்பாற்ற முயன்ற தாய் சாவு

கவுந்தப்பாடி அருகே மின்சாரம் தாக்கிய மகனை காப்பாற்ற முயன்ற தாய் இறந்தார்.
கவுந்தப்பாடி அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கிய மகனை காப்பாற்ற முயன்ற தாய் சாவு
Published on

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி அருகே மின்சாரம் தாக்கிய மகனை காப்பாற்ற முயன்ற தாய் இறந்தார்.

மின்சாரம் தாக்கியது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பாலப்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி காந்திமதி (வயது 47). மகன் ஹரிபிரசாத் (வயது 24).

கடந்த 7-ந் தேதி வெளியே சென்றிருந்த ஹரிபிரசாத் இரவு 8.45 மணிஅளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது மழை பெய்து கொண்டு இருந்தது. அதனால் வீட்டுக்குள் செல்வதற்காக வெளிப்புற கதவை திறக்க முயன்றார். அப்போது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது.

இதனால் அலறி துடித்த ஹரிபிரசாத் மயங்கி விழுந்தார். அவரின் சத்தத்தை கேட்டு வீட்டுக்குள் இருந்த காந்திமதி வெளியே ஓடிவந்தார். அப்போது மயங்கி கிடந்த மகனை பார்த்து, பதறிப்போய் அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதனால் அவரும் அலறி துடித்தார்.

பரிதாப சாவு

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் மின்சாரத்தை துண்டித்து தாயையும், மகனையும் மீட்டார்கள்.

அதன்பின்னர் உடனே இருவரையும் ஆம்புலன்சில் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் காந்திமதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மின்கசிவால் கதவில் மின்சாரம் பாய்ந்து ஹரிபிரசாத்தை தாக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஸ், சப்-இன்ஸ்பெக்டர் சின்னராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து கதவில் எப்படி மின்சாரம் பாய்ந்தது? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com