

திருக்கடையூர்;
செம்பனார்கோவில் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி இறந்தார்.
கட்டிட தொழிலாளி
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள கிடாரங்கொண்டான் மெயின்ரோட்டை சேர்ந்தவர் துரை மகன் வேல்முருகன் (வயது40). கட்டிட தொழிலாளியான இவர்,நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது தான் அணிந்திருந்த ஈரமான ஆடையுடன் சென்று அங்குள்ள மின்மோட்டாரை இயக்கிய போது அதிலிருந்து மின்சாரம் வேல்முருகன் மீது பாய்ந்தது.
பரிதாப சாவு
இதனால் சுருண்டு விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், வேல்முருகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.இது குறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்த வேல்முருகனுக்கு திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.