மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயக்கம்-தெற்கு ரெயில்வே

பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயக்கம்-தெற்கு ரெயில்வே
Published on

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால், பல இடங்களில் ரெயில் தண்டவாளத்தில் மழை நீர் புகுந்து, மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. கடற்கரை செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில் சேவை சனிக்கிழமை காலை தாமதமாக தொடங்கினாலும் வழக்கம்போல ரெயில்கள் இயக்கப்பட்டன.

இதேபோல, சென்னை சென்டிரல் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட மார்க்கங்களில் மின்சார ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. இதனிடையே, பல்லாவரத்தில் ரெயில் தண்டவாளத்தில் மழை நீர் புகுந்ததால், மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், ரெயில் சேவை சனிக்கிழமை மதியம் ஒரு மணி நேரம் தாமதமாகின. அதன்பிறகு, கடற்கரை தாம்பரம் இடையே நேரடி ரயில் சேவை துண்டிக்கப்பட்டது. தாம்பரத்துக்கு புறப்பட்ட மின்சார ரெயில்கள் பல்லாவரத்தில் நிறுத்தப்பட்டது. அதேபோல, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்பட்ட மின்சார ரெயில் வண்டலூர் வரை மட்டும் இயக்கப்பட்டன.

புயல் எச்சரிக்கை காரணமாக, சென்னை கடற்கரை வேளச்சேரி இடையே மதியம்12.15 முதல் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தண்டவாளத்தில் தேங்கிய மழை நீர், பலத்த காற்று காரணமாக, ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று இரவு பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் சென்னை பெருமளவு பாதிப்பு ஏற்படவில்லை. இதையடுத்து மின்சார ரெயில்கள் வழங்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com