ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று மின்சார ரெயில்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையான இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று மின்சார ரெயில்கள் இயக்கம்
Published on

சென்னை,

தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு, இன்று (வியாழக்கிழமை) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (31-ந்தேதி) பொதுவிடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும். சென்னை சென்டிரல் - அரக்கோணம், சென்டிரல் - கும்மிடிப்பூண்டி, சென்டிரல் - சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com