மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சாவு

எட்டயபுரம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சாவு
Published on

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள படர்ந்தபுளி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் குருநாதன் (வயது 28). இவர் மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.

நேற்று காலை படர்ந்தபுளி ஊராட்சி மன்றம் அருகே தெரு விளக்கு மாற்றுவதற்காக மின்கம்பத்தில் ஏறிய போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குருநாதன் உயிரிழந்தார்.

இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த குருநாதனுக்கு திருமணம் ஆகி கோட்டைச்செல்வி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com