திருவட்டார் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரிக்கல் தொழிலாளி உயிரிழப்பு..!

மின்சார ஒயர் கட்டுவதற்கு இடைஞ்சலாக இருந்த முருங்கை மரக்கிளையை வெட்டும்போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார்.
திருவட்டார் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரிக்கல் தொழிலாளி உயிரிழப்பு..!
Published on

கன்னியாகுமரி:

திருவட்டார் செக்காலவிளை பாலையன் மகன் பிரகாஷ்(38). எலக்ட்ரிக்கல் தொழிலாளி. இவர் கடந்த 8-ந் தேதியன்று தச்சூரில் உள்ள வினொ ஜெபர்சிங் என்பவரது வீட்டில் மின்சார சர்வீஸ் கம்பி கட்டுவதற்காகச் சென்றுள்ளார்.

இவர் இரும்பிலான ஏணியை இரும்புக்குழாயுடன் சேர்த்து நின்றபடி, இடைஞ்சலாக இருந்த முருங்கை மரக்கிளையை ஏணியில் இருந்து வெட்டியுள்ளார். அப்போது மின் வாரிய மின் கம்பியில் ஏணியுடன் சரிந்து விழுந்தது.

இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பிரகாஷ் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து பிரகாஷின் மனைவி நிஷா அளித்த புகாரின் பேரில், திருவட்டார் போலீசார் உடலைக்கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com