

பனமரத்துப்பட்டி:
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
எலக்ட்ரீசியன்
சேலம் மாவட்டம் மல்லூர் பாரப்பட்டி அருகே உள்ள மேச்சேரிபாளையம் கிராமம் பூசாரிக்காடு பகுதி சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 33). இவர் தனியார் நூல் மில்லில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் தன்னுடைய அண்ணன் முறையான சித்தப்பா மகன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த அண்ணன் மனைவியுடன் அவர் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணிக்கு தெரியாமலேயே செல்வகுமார் தனது செல்போனில் அவரை ஆபாசமாக படம் பிடித்துள்ளார். பிறகு அந்த ஆபாச படத்தை காட்டி தனது ஆசைக்கு இணங்கி உல்லாசமாக இருக்க வரும்படி கூறி தொல்லை கொடுத்துள்ளார்.
தகராறு
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு அண்ணிக்கு செல்வகுமார் போன் செய்துள்ளார். அப்போது போனை அண்ணன் எடுத்ததால் செல்வகுமார் போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து செல்வகுமாரின் அண்ணன் தனது சித்தப்பாவிடம் சென்று உங்கள் மகன், தவறாக நடக்க முயல்கிறான் என்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
அப்போது அங்கு வந்த செல்வகுமார் நான் அப்படித்தான் செய்வேன் உன்னால் என்ன செய்ய முடியும் என கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் செல்வகுமார் தனது அண்ணனை தாக்கியுள்ளார். மேலும் ஆபாசமாக எடுத்து வைத்திருந்த படங்களை வேறு ஒரு பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளார்.
கைது
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் பெண்களை ஆபாசமாக படம் எடுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.