மது குடித்ததை பெற்றோர்கள் கண்டித்ததால் எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை....!

குடித்துவிட்டு தகராறு செய்ததை பெற்றோர்கள் கண்டித்ததால் எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்
மது குடித்ததை பெற்றோர்கள் கண்டித்ததால் எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை....!
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ் (வயது 20). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவர் குடிபோதையில் ஊரில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை விக்னேஷின் பெற்றோர்கள் கண்டித்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு விக்னேசை அவரது பெற்றோர்கள் கண்டித்து உள்ளனர். இதனால் விக்னேசுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு நடைந்துள்ளது.

இதனால் விரக்தி அடைந்த விக்னேஷ் வண்டரந்தாங்கள் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேல் நீர் தேக்க தொட்டி தூணில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் காட்பாடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விக்னேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com