கடன் வாங்கியவர்கள் திருப்பித்தராமல் மிரட்டியதால் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் வாங்கியவர்கள் திருப்பித்தராமல் மிரட்டியதால் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடன் வாங்கியவர்கள் திருப்பித்தராமல் மிரட்டியதால் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சென்னை வியாசர்பாடி, பெரியார் நகர், அழகிரிசாமி தெருவை சேர்ந்தவர் படவேட்டான் (வயது 54). எலக்ட்ரீசியன். இவரது மனைவி மாலா (52). குடும்ப பிரச்சினை காரணமாக படவேட்டான் கடந்த 3 ஆண்டுகளாக வந்தவாசியில் உள்ள தனது தாயுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை வந்த படவேட்டான் அருகே உள்ள தனது அண்ணனும், தி.மு.க கட்சியில் பெரம்பூர் தொகுதியின் கட்டிட பிரிவு தலைவருமான சேட்டு என்பவர் வீட்டில் தங்கினார். நேற்று காலை அவரது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் படவேட்டான் ரூ.8 லட்சம் வரை வெளியே வட்டிக்கு விட்டிருந்ததாகவும், அவரிடம் பணம் வாங்கியவர்கள் திருப்பித் தராமல் மிரட்டியதால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com