பழுதாகி நின்ற லாரி மீது மொபட் மோதி எலக்ட்ரீசியன் பலி

பழுதாகி நின்ற லாரி மீது மொபட் மோதி எலக்ட்ரீசியன் பலியானார்.
பழுதாகி நின்ற லாரி மீது மொபட் மோதி எலக்ட்ரீசியன் பலி
Published on

திருச்சி ராம்ஜிநகர் அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 28). எலக்ட்ரீசியன், இவருக்கு திருமணமாகி ஜெயலலிதா (24) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வேலையை முடித்துவிட்டு மொபட்டில் நண்பரை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பழுதாகி நின்ற லாரியின் பின் பக்கம் அவர் மோதி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிவசங்கரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்த புகாரின் பேரில் ராம்ஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com