மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கியதில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
Published on

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கொரட்டூர் குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் வெங்கடேசன் (வயது 46) எலக்ட்ரீசியன். இவர் கூவாகம் தொட்டி பகுதியை சேர்ந்த காந்தி என்பவரின் நிலத்தில் இருந்த மின் மோட்டார் பழுதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com