தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதி எலக்ட்ரீசியன் பலி

தூத்துக்குடி புதிய துறைமுகம்-மதுரை பைபாஸ் ரோட்டில் எலக்ட்ரீசியன் ஒருவர் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு கார் அவரது பைக் மீது மோதியது.
தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதி எலக்ட்ரீசியன் பலி
Published on

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி சந்தையார் குடியிருப்பைச் சேர்ந்த சண்முகசாமி மகன் வீரபொம்மு (வயது 55). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது மோட்டார் பைக்கில் பாஞ்சாலங்குறிச்சி நேக்கி சென்று கொண்டிருந்தார்.

தூத்துக்குடி புதிய துறைமுகம்- மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒரு கார் இவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குமாரகிரி நடுத் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் ராமசுப்பு(36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com