

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி போட்டியிடுகிறார். பிரச்சாரத்தின் போது செய்தியாளரிடம் பேசியதாவது:-
அண்ணா திமுக என்ற கட்சி திமுகவை எதிர்த்து 54 வருடம் ஆனது. எங்களுக்கு 54 வருட வரலாறு இருக்கிறது. மேலும் 54 வருட சரித்திரம் இருக்கிறது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தலைவர் அண்ணண் எடப்பாடியார் இந்த வரலாறு எங்களிடம் இருக்கிறது.
நாங்கள் ஏன் அவர்களை பார்த்துகிட்டு இருக்க வேண்டும் எங்களுக்கு திமுக தான் எதிரி, திமுக தான் எங்களுக்கு தீயசக்தி என்று எங்கள் தலைவர்கள் சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். நாங்கள் திமுகவை தான் பார்த்துக்கொண்டு இருப்போமே தவிர இவர்களை அல்ல என கூறினார்.
ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள் தன்னிடம் சொல்லும் முக்கியமான பிரச்சனைகள் மின்சார கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்ந்துவிட்டதாகவும்.மேலும் ஒரு சாதாரண டீக்கடை,வெத்திலை கடை வைத்து இருந்தால் கூட வணிகமாக்கி விடுகிறார்கள்.
இதனால் வணிக கரண்ட் பில் கட்ட முடியவில்லை இதற்கு முன் 300 ரூபாயாக வர கூடிய இடத்தில் 1300 ரூபாய் வருவதாகவும் இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும். மேலும் கட்சி தலைவரின் மூலமாக சரி செய்யுமாறு மக்கள் கோரிக்கை வைத்ததாக கூறினார்.
இங்கு எப்போதும் தீர்க்க முடியாத பிரச்சனை என்னவென்றால் மழை வந்தால் மக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும்.