டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கும் பணி: மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சாரம் தாக்கி பலி
Published on

திருக்கடையூர்,

செம்பனார்கோவில் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார். டிரான்ஸ்பார்மரில் பழுதுநீக்கிய போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.

மின்சாரம் தாக்கி பலி

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் மேலப்பாதி, நடுக்கரையை சேர்ந்தவர் கணேசன்(வயது 49). இவர் செம்பனார்கோவில் மின்வாரியத்தில் ஒயர்மேனாக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு முடிகண்ட நல்லூரில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுதை சரி செய்வதற்காக கணேசன் சென்றார். டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கிக்கொண்டிருந்த போது உயர் மின்னழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனை

இது குறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரகுராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி இறந்த கணேசனுக்கு ஹேமா(40) என்ற மனைவியும், தனலட்சுமி (13) என்ற மகளும், முத்துக்குமரன்(12) என்ற மகனும் உள்ளனர். டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்க சென்ற மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் செம்பனார்கோவில் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com