தூத்துக்குடியில் பைக் விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி

மின்வாரிய ஒப்பந்த ஊழியர் ஒருவர் திருநெல்வேலி சென்றுவிட்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது வாகைகுளம் அருகே முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக அவரது பைக் மோதியது.
தூத்துக்குடியில் பைக் விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி
Published on

தூத்துக்குடி அம்பேத்கர்நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கணேசன் (வயது 21), மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 8ம் தேதி திருநெல்வேலி சென்றுவிட்டு அதிகாலை 2 மணியளவில் பைக்கில் ஊர் திரும்பிக் கெண்டிருந்தார்.

பெட்டலூரணி விலக்கு, வாகைகுளம் அருகே வந்தபேது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக இவரது பைக் மேதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து புதுக்கேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com