நெல்லை, தென்காசியில் இன்று முதல் மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள கோட்ட அலுவலகங்களில் இருக்கும் செயற்பொறியாளர் அலுவலகங்களில் பகல் 11 மணியளவில் மே மாதத்திற்கான மின்வாரிய குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.
திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பின்வரும் கோட்ட அலுவலகங்களில் இருக்கும் செயற்பொறியாளர் அலுவலகங்களில் பகல் 11 மணியளவில் பின்வருமாறு மே மாதத்திற்கான மின்சார வாரியம் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும்.
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்தில் உள்ள வள்ளியூர் கோட்ட அலுவலக செயற்பொறியாளர் அலுவலகத்தில் முதலாவது வெள்ளிக்கிழமையான இன்றும் (2.5.2025), சங்கரன்கோவில் கோட்ட அலுவலக செயற்பொறியாளர் அலுவலகத்தில் 6.5.2025 முதலாவது செவ்வாய்கிழமையும், திருநெல்வேலி கிராமப்புற கோட்ட அலுவலக செயற்ெபாறியாளர் அலுவலகத்தில் 9.5.2025 இரண்டாவது வெள்ளிக்கிழமையும், தென்காசி கோட்ட அலுவலக செயற்பொறியாளர் அலுவலகத்தில் 13.5.2025 இரண்டாவது செவ்வாய்கிழமையும், திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட அலுவலக செயற்பொறியாளர் அலுவலகத்தில் 16.5.2025 மூன்றாவது வெள்ளிக்கிழமையும், கடையநல்லூர் கோட்ட அலுவலக செயற்பொறியாளர் அலுவலகத்தில் 20.5.2025 மூன்றாவது செவ்வாய்கிழமையும், கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலக செயற்பொறியாளர் அலுவலகத்தில் 27.5.2025 நான்காவது செவ்வாய்கிழமையும் பகல் 11 மணியளவில் மின்சார வாரியம் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






