மின் தேவையை சமாளிக்க மின்சார வாரியம் தயாராக உள்ளது - சிவ்தாஸ் மீனா

கோடையில் அதிக மின் தேவை ஏற்பட்டால் அதை சமாளிக்க தமிழக மின்சார வாரியம் தயாராக உள்ளது என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
மின் தேவையை சமாளிக்க மின்சார வாரியம் தயாராக உள்ளது - சிவ்தாஸ் மீனா
Published on

சென்னை,

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

"மக்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின் தடை ஏற்பட்டால் மக்கள் மின்னகத்தை தொடர்புகொண்டு மின் விநியோகம் சீரமைப்பு பணிகளில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக மின் தேவை 20,830 மெகா வாட் ஆக அதிகரித்துள்ள நிலையில், மே மாத இறுதி இதுவரை அதிகளவு மின் நுகர்வு ஏற்பட்டாலும், அதை சமாளிக்க மின்சார வாரியம் தயாராக உள்ளது. சென்னையில் இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன." என்றார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com