மின் கட்டணம் சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது - கீதாஜீவன் குற்றச்சாட்டு

தவெக ஆட்சிக்கு வந்தபிறகு மின்தடை என்பது சாதாரண ஒரு நிகழ்வாகிவிட்டதாக கீதாஜீவன் குற்றம் சாட்டியுள்ளார்.
மின் கட்டணம் சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது - கீதாஜீவன் குற்றச்சாட்டு
Published on

சென்னை,

முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது;

மு.க. ஸ்டாலின் ஆட்சியில் 100 யூனிட் குறைக்கப்பட்டபோது கட்டணம் எவ்வளவு இருந்தது. இப்போது எவ்வளவு இருந்தது என்று பாருங்கள்? சத்தமில்லாமல் மின்சார கட்டணம் ஒரு யூனிட்டிற்கு இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இன்று 4 ரூபாய் 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே, அவர்கள் எந்த அளவிற்கு பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள் என்ற அறிந்து கொள்ள முடியும்.

விலைவாசி ஏறுகிறது. எல்லா இடங்களிலும் மின்வெட்டு தொடர்ச்சியாக இருக்கிறது. பல இடங்களில் யாரும் கேள்வி கேட்க முடியவில்லை. புகார் செய்ய முடியல. எதற்கு மின்தடை ஏற்படுகிறது என்பது தெரியவில்லை. தவெக ஆட்சிக்கு வந்தபிறகு மின்தடை என்பது சாதாரண ஒரு நிகழ்வாகிவிட்டது.

பஞ்ச் டயலாக் ஆட்சிக்கு முடிவு கொடுக்கணும்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com