சென்னையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.
சென்னையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

எழும்பூர், ஆவடி மற்றும் பெரம்பூர் கோட்டங்களில் ஆகஸ்ட் 07 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

எழும்பூர் கோட்டம்: செயற்பொறியாளர் இ&ப/ எழும்பூர் கோட்ட அலுவலகம், எண். 53, ஈ.வி.கே.சம்பத் சாலை, 33/11 கி.வோ. எழும்பூர் துணை மின் நிலைய வளாகம், வேப்பேரி, சென்னை-600 007.

ஆவடி கோட்டம்: செயற்பொறியாளர்/ இ&ப/ ஆவடி கோட்ட அலுவலகம், 230 கி.வோ ஆவடி துணை மின் நிலைய வளாகம், எஸ்.எம்.நகர், முருகப்பா பாலிடெக்னிக் அருகில், ஆவடி சென்னை-600 062.

பெரம்பூர் கோட்டம்: செயற்பொறியாளர் இ&ப பெரம்பூர் அலுவலகம், 110 கி.வோ செம்பியம் துணை மின் நிலைய வளாகம், எம்.இ.எஸ்.ரோடு, சிம்சன் எதிரில், சென்னை-600 011.

பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மையம், மேற்கு மற்றும் வடக்கு மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com