சென்னையில் 24ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: மின்சாரவாரியம் தகவல்

சென்னை சோழிங்கநல்லூர் கோட்டத்தில் வருகிற 24ம் தேதி, செவ்வாய்கிழமை நடைபெறும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின்சாரத்துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.
சென்னையில் 24ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: மின்சாரவாரியம் தகவல்
Published on

சென்னை சோழிங்கநல்லூர் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 24.2.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில், செயற்பொறியாளர் / இயக்கம் & பராமரிப்பு / சோழிங்கநல்லூர், சேரன் நகர், பெரும்பாக்கம், சென்னை-100 (பெரும்பாக்கம் துணைமின் நிலையம் அருகில்) என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

சோழிங்கநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட மேடவாக்கம், நன்மங்கலம், ஜல்லடியன்பேட்டை, கௌரிவாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்தூர், நாராயணபுரம், சித்தாலப்பாக்கம், அரசன்கழனி, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர்/ சென்னை மி.ப.வ/தெற்கு-2 கேட்டுக் கொண்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com