

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அடையாறு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 5.3.2026 (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு செயற்பொறியாளர்/ இ&ப/ அடையாறு, தரைதளம், வேளச்சேரி துணை மின் நிலைய வளாகம், வேளச்சேரி மெயின் ரோடு, வேளச்சேரி, சென்னை-42 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர்/ சென்னை மின்பகிர்மான வட்டம்/ அடையாறு (தெற்கு-II) அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.