தாம்பரம் கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

பொதுமக்கள் மற்றும் மின்நுகர்வோர், கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

சென்னை,

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தாம்பரம் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 14.05.2026 (வியாழக்கிழமை) காலை 11.00 மணியளவில், செயற் பொறியாளர்/இயக்கம் & பராமரிப்பு / தாம்பரம், 110 கி.வோ, புதுதாங்கல் துணை மின் நிலைய வளாகம், 1-வது தளம், முல்லை நகர், மேற்கு தாம்பரம், சென்னை-45 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

இரும்புலியூர், கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், கடப்பேரி, நேரு நகர், சேலையூர், சித்தாலப்பாக்கம், மாடம்பாக்கம், செம்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மின்நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர், சென்னை மி.ப.வ/அடையாறு (தெற்கு-2) கேட்டுக் கொண்டுள்ளார்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com