

சோழிங்கநல்லூர்,
தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
சோழிங்கநல்லூர் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 28.07.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில், செயற் பொறியாளர் / இயக்கம் & பராமரிப்பு /சோழிங்கநல்லூர், சேரன் நகர், பெரும்பாக்கம், சென்னை-100. (110 கி.வோ பெரும்பாக்கம் துணைமின் நிலையம் அருகில்) அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
சோழிங்கநல்லூர் (மேடவாக்கம், நன்மங்கலம், ஜல்லடியன்பேட்டை, கௌரிவாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்தூர், நாராயணபுரம், சித்தாலப்பாக்கம் அரசன்காலனி, பெரும்பாக்கம்) ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மின்சாரத்துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர் சென்னை மி.ப.வ/தெற்கு-2 அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.