

சென்னை,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
போரூர் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணியளவில், 17.03.2026 செயற் பொறியாளர்/இயக்கம் & பராமரிப்பு / போரூர் அலுவலகம், முதல் மாடி 110 கி.வோ, எஸ்.ஆர்.எம்.சி. துணை மின்நிலைய வளாகம், செட்டியார் அகரம் ரோடு, போரூர், சென்னை-116. அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர்/சென்னை மி.ப.வ/தெற்கு-1 கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது.