மின்வாரிய ஒப்பந்த ஊழியர் தற்கொலை

திருமங்கலம் அருகே மின்வாரிய ஒப்பந்த ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
மின்வாரிய ஒப்பந்த ஊழியர் தற்கொலை
Published on

திருமங்கலம் அருகே உள்ள மேலஉரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மகன் அஜித்குமார் (வயது 28).இவர் திருமங்கலம் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஜித்குமார் தூக்குப்பாட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com