சென்னையில் மின் கம்பி வழித்தடங்களை ஆய்வு செய்ய பொறியாளர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவு

பூமிக்கு வெளியே மின் கம்பிகள் இருந்தால் 4 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும் எனவும் மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை கண்ணகி நகர் பகுதியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த வரலட்சுமி என்ற பெண், கடந்த 23-ந்தேதி பணிக்கு செல்வதற்காக கண்ணகி நகர் 11 வது குறுக்கு தெருவில் நடந்து சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சாலையில் தேங்கியிருந்த மழைநீரில், மின்சார வயரில் இருந்து மின்சாரம் கசிந்து வரலட்சுமி மீது பாய்ந்ததே அவரது உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது.
இந்த நிலையில், சென்னை முழுவதும் மின் கம்பி செல்லும் வழித்தடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என பொறியாளர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மின் கம்பி பூமிக்கு வெளியே தெரியாமல் இருக்குமாறு பணிகளை மேற்கொள்ளவும், பூமிக்கு வெளியே மின் கம்பிகள் இருந்தால் 4 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும் எனவும் மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story






