மின் இணைப்பு சேவைகள் இரண்டு நாட்களுக்கு இயங்காது - தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தகவல்

புதிய தரவுத்தளத்திற்க்கு ஏற்றவாறு மேம்படுத்தும் பணிகள் பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மின் இணைப்பு சேவைகள் இரண்டு நாட்களுக்கு இயங்காது - தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தகவல்
Published on

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நுகர்வோருக்கு மேம்பட்ட மற்றும் விரைவான சேவைகளை வழங்கும் நோக்கில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) தனது தாழ்வழுத்த (LT) பில்லிங் மென்பொருளை புதிய சர்வர்கள் மற்றும் தரவுகளை புதிய தரவுத்தளத்திற்க்கு ஏற்றவாறு மேம்படுத்தும் பணிகளை பல கட்டங்களாக மேற்கொண்டு வருகிறது.

இதன் காரணமாக, காஞ்சிபுரம் மண்டலத்திற்குட்பட்ட அடையார் மின்பகிர்மான வட்டத்தின் அடையார், ஐ.டி காரிடார், தாம்பரம், பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லூர் கோட்டங்கள், சென்னை தெற்கு மின் பகிர்மான வட்டத்தின் கே.கே.நகர்,போரூர், கிண்டி கோட்டங்கள் மற்றும் சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்தின் அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி கோட்டங்கள் ஆகியவற்றின் மின் நுகர்வோர்கள் மின் கட்டண வசூல் தொடர்பான கவுண்டர் மற்றும் ஆன்லைன் சேவைகள், புதிய மின் இணைப்பு விண்ணப்ப சேவைகள் ஆகியவை 23.05.2026 (சனிக்கிழமை) 00.00 மணி முதல் 24.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 24.00 மணி வரை தற்காலிகமாக இயங்காது.

பணிகள் நிறைவடைந்தவுடன் அனைத்து சேவைகளும் வழக்கம்போல் மீண்டும் செயல்படுத்தப்படும். பொதுமக்கள் மற்றும் மின்நுகர்வோர் இதனை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதனால் ஏற்படும் தற்காலிக சிரமத்திற்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வருந்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com